மாலத்தீவில் அறைகுறை ஆடையில் விடுமுறையை கொண்டாடும் ஆப்பிள் பியூட்டி ஹன்சிகா மோத்வானி.
நடிகைகள் படப்பிடிப்புகள் இல்லாத நாட்களை விடுமுறை நாட்களாக கொண்டாடுவது வாடிக்கையான ஒன்று தான். தங்கள் விடுமுறையை கொண்டாட பெரும்பாலான நடிகைகள் ஏதேனும் தீவுகளுக்கு சென்று விடுமுறையில் சந்தோசமாக இருப்பதுடன் அழகிய புகைப்படங்களையும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்கள்.
நடிகை ஹன்சிகா மோத்வானி, வயது 28. மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். ஹிந்தி திரையுலகிலும், ஹிந்தி தொலைக்காட்சி உலகிலும் குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னனி கிளாமர் நாயகியாக வலம் வந்தவர்.
தமிழ் திரை ரசிகர்களால் செல்லமாக ஆப்பிள் பியூட்டி என்றழைக்கப்படும் நடிகை ஹன்சிகா மோத்வானியை சின்ன குஸ்பூ என்றும் திரையுலகத்தினர் அழைத்து வந்தனர். காரணம் இவர் கொஞ்சம் கொளுகொளுவென செம்ம அழகாக இருப்பார். தமிழ் திரையுலகில் முன்னனி ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக கிளாமராக நடித்து அசத்தி வந்தார் நடிகை ஹன்சிகா.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் குறைந்து வந்த காரணத்தினால் நடிகை ஹன்சிகா மோத்வானி அதிரடி ஆடைகுறைப்பில் இறங்கி மிகவும் கிளாமராக நடித்து வந்தார். இது மட்டுமின்றி தீவிர உடற்பயிற்சி மூலாக தன் உடல் எடையவும் குறைத்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி.
இருப்பினும் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு போதிய திரை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது நடிகை ஹன்சிகா மோத்வானி கைவசம் "மஹா" என்ற ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
படப்பிடிப்புகள் இல்லாமல் ஓய்வில் இருந்து வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய விடுமுறையை கொண்டாட மாலத்தீவிற்கு சென்றுள்ளார். மாலத்தீவில் குருதிவாரு என்னுமிடத்தில் உள்ள மோவன்பிக் ரிசார்ட்டில் தங்கியுள்ளார் நடிகிய ஹன்சிகா மோத்வானி.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகை ஹன்சிகா மோத்வானி இந்த ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளத்திலும் கடற்கரையிலும் அறைகுறை ஆடையில் சில அசத்தலான புகைப்படங்களையும், உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படங்களையும் க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் நடிகை ஹன்சிகா.
சமூக வலைதளத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு இந்த புகைப்படங்கள் புதிய பட வாய்ப்புகளை கொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.








No comments