திருமணம் ஆன இரண்டே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை- போலீஸ் விசாரனை.
கோயம்புத்தூர் கவுன்டம்பாளையம் அருகே உள்ள கலிக்க நாயக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் சவுந்தர்யா வயது 23. இவருக்கும் இவருடைய உரவினர் நவீனுக்கும் 2 மாதங்கலுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்த போது தனக்கு நவீன் பிடிக்கவில்லை என சவுந்தர்யா தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
ஆனால் மகளின் பேச்சை கேட்காத பெற்றோர் சவுந்தர்யாவை வற்புறுத்தி அவரை நவீநுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாத தன் பெற்றோர் வீட்டுக்கு வந்த சவுந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து விரைந்த போலீசார் விசாரனை நடத்தினர்.
இந்த விசாரனையில் பொறியியல் பட்டதாரியான சவுந்தர்யாவிற்கு பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த நவீனை அவரது பெற்றோர் வற்புருத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமண்ம முடிந்து சில நாட்களிலே கனவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு எற்பட்டுள்ளது. தொடர்ந்து மன வருத்தத்தில் இருந்த சவுந்தர்யா தன் பெற்றோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

No comments