Breaking News

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எவை?


2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுகின்றது. பிளாஸ்டிக் பொருட்கள் என்பது நம் அனைவரது வாழ்விலும் ஒன்றிப்போயுள்ளது. ஆனால் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் நம்முடைய புவி சூழலை அழிக்கும். மற்ற பொருட்களை போல இது எளிதில் மட்கும் தன்மை உள்ளவையல்ல, ஆகவே இது மண்ணின் அமைப்பிற்கும், மண் சத்துக்கும் கேடு விளைவிக்கின்றது. பிளாஸ்டிக் பையானது நிலத்தடி நீர் மண்ணுக்குள் செல்ல விடாமல் தடுக்கும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்திவிட்டு அதை சாலையில் தூக்கி எறிகின்றோம், அதை கால்நடைகள் உண்டுவிட்டு உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு நாளடைவில் உயிரிழக்கும். இது மட்டுமின்றி, காபி, டீ, சாப்பாடு போன்றவற்றை சூடாக இந்த பிளாஸ்டிக் பைகளில் வைத்து நாம் உபயோகப்படுத்தும் போது, இந்த சூடான உணவு பொருட்களினால் பிளாஸ்டிக் பைகளின் மூலக்கூறுகள் உருகி நம் உணவுடன் கலந்து நம் உடலுக்குள் செல்லும், நாளடைவில் இது புற்று நோய் போன்ற கொடிய நோய்களை உண்டாக்கும். இப்படி மணிதனுக்கும், கால்நடைகளுக்கும், மண் வளத்திற்கும் பல தீமைகளை விளைவிக்கும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் மக்கள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

கீழே உள்ள வீடியோவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் விலக்கு பெற்ற பிலாஸ்டிக் பொருட்கள் எவை என்பதை பாருங்கள்.


No comments