Breaking News

தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ் இடங்கள்.



தமிழக மருத்துவ கல்வித்துறை இயக்குநர் திரு.எட்வின் ஜோ. இவர்  வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆகவே தற்போது தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2900 எம்.பி.பி.எஸ் இடங்கள் 3250 இடங்களாக உயர்ந்துள்ளது. கரூரில் இந்தாண்டு புதிதாக ஒரு மருத்துவக்கல்லூரி கட்டி முடிக்கப்பட்டு டாக்டர்கள் நியமனம் நடந்து வருகின்றது. இந்த புதிய மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர மதுரை மற்றும் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக தலா 100 இடங்கள் நிரப்ப மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சிலிடம் அளிக்கப்பட்டுள்ள இந்த விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டு ஏற்க்கப்பட்டவுடன் வரும் கல்வியாண்டில் (2019-2020) கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரப்பப்படும் என எட்வின் ஜோ கூறினார்.

No comments